ஒரு லிப் டூ லிப் கொடுத்தது இவ்வளவு பெரிய குற்றமா? அலுத்துக் கொள்ளும் ஐஸ்

|

Aishwarya Rai Did Not Appreciate People

மும்பை: 3 மணிநேரம் ஓடும் படத்தில் வெறும் 2 நொடிகள் வரும் முத்தக் காட்சி குறித்து விளக்கம் கேட்கிறார்களே என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தூம் இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே போய் ரித்திக் ரோஷனுக்கு லிப் டூ லிப் கொடுத்திருப்பார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

தூம் படத்தில் முத்தக் காட்சியில் நடித்ததற்காக சில கோர்ட் நோட்டீஸ்கள் கூட வந்தது. ஐஸ்வர்யா நீங்கள் இப்படி நடிக்கலாமா? எங்கள் மகள்களுக்கு நீங்கள் தான் முன் மாதிரியாக இருக்கிறீர்கள், அவர்கள் நீங்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதைப் பார்க்க சங்கடப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிவித்தனர்.

நான் ஒரு நடிகை. எனது வேலையைத் தான் நான் செய்கிறேன். 3 மணிநேரம் ஓடும் படத்தில் வெறும் 2 நொடிகள் வரும் காட்சி குறித்து விளக்கம் கேட்கிறார்கள் என்றார்.

 

Post a Comment