அஜீத்தை அவரது ரசிகர்கள் நேசிக்கும் அளவுக்கு நாங்களும் நேசிக்கிறோம்: விஷ்ணுவர்தன்

|

We Love Ajith As Much As You Do

சென்னை: அஜீத் குமாரை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று டுவிட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இது தான்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறுகையில்,

அஜீத்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

அஜீத்துக்கு காயம் என்றதும் ரசிகர்கள் பதறியதைப் பார்த்து விஷ்ணுவர்தன் நெகிழ்ந்துவிட்டார். அடடா இவர்களுக்குத் தான் 'தல' மீது எவ்வளவு பாசம் என்று நினைத்துள்ளார்.

 

Post a Comment