தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்காத ரஜினி

|

Rajini Never Acted Marathi Films

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தாய்மொழியான மராத்தியில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை.

இன்று பிறந்நாள் கொண்டாடும் ரஜினிகாந்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

ரஜினிகாந்தின் சொந்த பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது பெற்றோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். கர்நாடக தலைநகர் பெங்களூரில் வளர்ந்த ரஜினியின் தாய் மொழி மராத்தி ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்க மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இத்தனை மொழிப் படங்களில் நடித்த அவர் தனது தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராகும் முன்பு அவர் பல்வேறு சின்ன சின்ன வேலைகளை செய்துள்ளார். ஊரெல்லாம் கொண்டாடும் ரஜினிக்கு பிடித்த ஹீரோ கமல் தான். சிவாஜி பட வெற்றிக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை அடுத்து ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி.

ரஜினி பெரிய நடிகரான பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்துள்ள படங்களில் அவர் இறந்துபோகும் காட்சி கிடையாது. அவர் இறப்பது போன்று காட்சி வைத்தால் அவரது ரசிகர்களின் மனம் புண்படும் என்று இயக்குனர்கள் நினைக்கின்றனர்.

 

Post a Comment