'நீதானே என் பொன் வசந்தம்' பெண்களுக்கான படம் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூறியுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா -சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்துள்ள படம் ' நீதானே என் பொன் வசந்தம்'. இளையராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
ஆனால் இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கவுதம் மேனன் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "பொதுவாக என் படங்களுக்கு பரவலாக எல்லோருடைய பாராட்டும் கிடைக்கும் , என்னுடைய 12 படங்களையும் இரு பாலினரும் ரசித்தாலும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலாக இருக்கும.
ஆனால் இது வரை ' நீதானே என் பொன் வசந்தம் ' படம் பார்த்து விட்டு என்னையும் என் குழுவினரையும் பாராட்டுவோர் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்... அது இப்படத்தின் கதாநாயகி நித்யாவின் கதாபாத்திரத்தை நான் படைக்கும் போதே வந்த உணர்வுதான் என்றாலும் இந்த ஆதரவு என்னை மிகவும் உற்சாக மூட்டுகிறது.
பொதுவாக காதல் படமென்றால் அது ஆண்களின் கண்ணோட்டத்தை சார்ந்தே இருக்கும் ஆனால் 'நீதானே பொன் வசந்தம் ' படம் ஆண் -பெண் இருவரின் கண்ணோட்டத்தையும் சார்ந்த படமாக உள்ளது. எனவே பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது. தயவு செய்து பார்த்து விடுங்கள்," என கேட்டுக் கொண்டுள்ளார் கவுதம்.
+ comments + 1 comments
mokka padam boss
Post a Comment