பட்ட அடி மறந்து, மீண்டும் படம் தயாரிக்க வருகிறது ஐங்கரன்!

|

Aingaran Restart Enter Film Production

வில்லு, ஏகன், சர்வம் என பெரும் தோல்விப் படங்களைத் தயாரித்த புகழுக்குரிய ஐங்கரன் நிறுவனம், மீண்டும் படம் தயாரிக்க வருகிறதாம்.

இந்த முறை சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறதாம்.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்போது ‘சிங்கம் 2' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கௌதம்மேனன் இயக்கும் படத்தில் இணைவார் என தெரிகிறது.

ஏற்கெனவே துப்பறியும் ஆனந்தன் என்ற தலைப்பில் இருவரும் படம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டான் கதாஸ் தயாரிக்கும் என கூறப்பட்டது.

இப்போது ஐங்கரன் தயாரிக்கப் போவது துப்பறியும் ஆனந்தனையா அல்லது புதிய படத்தையா என்பது கவுதம் மேனன் சொன்னால்தான் உண்டு.

ஐங்கரன் நிறுவனம் புதிய படம் தயாரிப்பது இருக்கட்டும், ஏற்கெனவே தயாரித்த பெட்டியில் தூங்கும் களவாடிய பொழுதுகள் என்னாச்சு?

 

Post a Comment