யானைகளுடன் ஒரு வருஷம்... - பிரபு மகனின் கும்கி அனுபவம்

|

Vikram Prabhu Shares Experience Kumki

கும்கி படத்தில் யானைகளுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார் விக்ரம் பிரபு.

சிவாஜி கணேசன் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 'கும்கி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

உண்மையில் அவர் அறிமுகமான முதல் படம் இதுதான். ஆனால் சுந்தர பாண்டியன் முந்திக் கொண்டது.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தை சுபாஷ் சந்திர போஸ் தயாரித்துள்ளார். படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.

டிசம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது கும்கி.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிங்குசாமிகூறுகையில், "படம் வரும் முன்னால் 'பில்டப்' பண்ணக்கூடாதுதான். ஆனால் கும்கிக்கு பண்ணலாம். படத்தை அவ்வளவு அழகாக எடுத்து வந்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லருக்கே தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். என் வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும்," என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு கூறும் போது, "ஒரு வருடம் யானைகளுடன் நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவம். படம் சிறப்பாக வந்துள்ளது. தாத்தா சிவாஜி, அப்பா பிரபு ஆகியோரின் பெயரை காப்பாற்றுவேன்," என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன் கூறும் போது, 'கும்கி'யை உலக தரத்தில் எடுத்துள்ளோம். காரணம் தயாரிப்பாளர் லிங்குசாமி கொடுத்த ஆதரவுதான் (பார்றா...!!)," என்றார்.

 

Post a Comment