எனக்கு எந்த பின்னணியும் கிடையாது ஆனால் நான் இன்றைக்கு சினிமா உலகில் இருக்கிறேன். இதற்கு காரணம் போராட்டம்தான். அதுதான் என்னுடைய வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறது என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.
சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.
சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.
நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.
சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை. அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார். சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.
Post a Comment