சென்னை: டிடிஎச்சில் ஒளிபரப்பாகவிருக்கும் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் ரிலீசாக அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
'விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டிவியில் ஒளிபரப்பும் முடிவால் கமலுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருபிரிவு தலைவரான கேயார் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் தியேட்டர்களை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது அவர்கள் நிலை. கமல் இந்த முடிவை கைவிடாவிட்டால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்' படத்தை திரையிடமாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர்.
இந்த விவகாரத்தில் சமரச முயற்சியில் கமல் ஈடுபட்டுள்ளார். அபிராமி ராமநாதன் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சென்னையில் கூடியபோது அவர்களுடன் டெலிபோனில் பேசி்ப பார்த்தார் கமல். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர கூட்டம் மதுரையில் இன்று காலை நடந்தது. சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் 80 பேர் இதில் கலந்து கொண்டார்கள். டி.டி.எச்.சில் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
+ comments + 1 comments
kamal hassan is great person and talented also, avar ethu pannalum oru artham irukkum so avar pecha keluga da
Post a Comment