சென்னை: இயக்குனர் ஏ.எல். விஜய் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் 40 நாட்கள் மும்பையில் தங்கவிருக்கிறார். விஜய்க்கு மும்பை நகர் ராசியாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இளைய தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது. அந்த படமும் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஷூட்டிங்கிற்காக 40 நாட்கள் மும்பையில் தங்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த 40 நாட்களில் படமாக்கப்படுகிறது. இதற்காக இயக்குனர் விஜயின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட வழக்கமான படக்குழுவினர் மும்பைக்கு செல்கின்றனர். மும்பை நகரில் எடுக்கப்படும் இந்த படமும் துப்பாக்கி போன்று ஹிட்டாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
துப்பாக்கியும் மும்பையில், அதை அடுத்த படமும் மும்பையில். என்ன விஜய் மும்பை உங்களுக்கு ராசியான ஊராகிவிட்டதோ?
Post a Comment