சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நதிகள் நனைவதில்லை படத்தில் நாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.
தமிழில் கடைசியாக 'இளைஞன்', 'மம்பட்டியான்' படங்களில் நடித்தார் மீரா ஜாஸ்மின். அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.
மீரா ஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைச் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார் என்றும் அவரைப் பற்றி செய்திகள் வந்தன.
இப்போது, அதைப் பொய்யாக்கும் விதத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் மீரா.
தமிழில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் இயக்கும் 'நதிகள் நனைவதில்லை' படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார்.
மலையாளத்தில் 'லிசமாயிடே வீடு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Post a Comment