மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது மூக்கை கூரானதாக ஆக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகைகள் தான் இத்தனை நாட்கள் ஏதாவது சிகிச்சை செய்து பெரிய திரையில் தாங்கள் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்குரிய சிகிச்சையையும் எடுத்தார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது மூக்கை கூர்மையாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஷாஹித் கபூர் தான் நடிக்கும் புது படமொன்றில் கூரான மூக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். மருத்துவரும் ஷாஹித் விருப்பப்படி அறுவை சிகிச்சை செய்து அவரின் மூக்கை கூரானதாக ஆக்கினார்.
இதனால் தான் கடந்த 2 மாதங்களாக ஷாஹித் நிருபர்களின் கேமராக்களில் படாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தார். பாலிவுட்டில் நிலவும் கடும் போட்டியால் அறுவை சிகிச்சை செய்தாவது அழகாக நடிகர், நடிகைகள் தயங்குவதில்லை.
நம்ம ஊர் அசின் கூட பாலி்வுட் போன பிறகு அங்குள்ள நடிகைகள் மாதிரி இருக்க வேண்டும் என்று ஒல்லிக்குச்சியாக ஆகிவிட்டார். மூக்கை அறுவை சிகிச்சை மூலம் அழகாக்கிய தமிழ் நடிகை என்றால் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீதேவி தான்.
Post a Comment