கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இவர்தாங்க!

|

நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம்.

manirathnam releases another first look of goutham   

இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது.

இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே...

எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம்.

இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

ஆமா...ஒரு படத்துக்கு எத்தனை முறை ஃபர்ஸ்ட் லுக் விடுவீங்க மணிரத்னம்?

 

Post a Comment