சென்னை: ராமர் படம் போட்ட சேலை கட்டியதற்காக தன்னை விமர்சிப்பவர்கள், கண்டிப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார் குஷ்பு.
ஹைதராபாதில் நடிகை குஷ்பு கடவுள் படம் போட்ட சேலை உடுத்தி சினிமா விழாவில் பங்கேற்றார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோரின் படங்கள் அவர் அணிந்திருந்த சேலையின் பார்டரில் இடம் பெற்றிருந்தன.
இதனால் இந்துக் கடவுள்களை முஸ்லிம் பெண்ணான குஷ்பு அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இந்த பிரச்சினை குறித்து குஷ்புவிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினையை நான் கண்டு கொள்ளவே இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இதை பெரிதுப்படுத்துகிறார்கள். சிலர் என் மூலமாக விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர்," என்றார்.
நெசமாலுமா குஷ்பு?
+ comments + 1 comments
kusbu not muslim , she indu please don't saying musilm thank you
Post a Comment