பில்லா 2-ல் அஜீத்தின் அக்கா மகளாக கொஞ்சமே கொஞ்ச நேரம் தலைகாட்டி, பின்ன பரிதாபமாக செத்துப் போகும் பார்வதி ஓமனக்குட்டனுக்கு இப்போது மறுஜென்மம் கிடைத்துள்ளது.
பில்லாவுக்குப் பிறகு அம்மணியின் சாப்டர் க்ளோஸ் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இப்போது நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
காமராசு, அய்யா வழி போன்ற படங்களை இயக்கிய நாஞ்சில் பிசி அன்பழகன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதில் நாயகனாக பிரணவ் மற்றும் கஞ்சா கருப்பு, ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்", மதுரை முத்து, டி.பி. கஜேந்திரன், பானுப்பிரியா, பாலா சிங் போன்றோரும் நடிக்கின்றனர். சௌந்தர்யன் இசையமைக்கிறார்.
கதை பிடித்ததால் இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாக பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்தார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
Post a Comment