சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்த பிறகு அஜீத் குமாரை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்கிய முதல் படமான தீனாவின் ஹீரோ அஜீத் குமாருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் படம், அதையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவாவின் படம் என்று அடுத்தடுத்து பிசியாக உள்ளார். இருப்பினும் தான் அஜீதுக்காக காத்திருக்கப் போவதாக முருகதாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே முருகதாஸ் துப்பாக்கி படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார். அதை முடித்து விட்டு அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கிறார். அதற்குள் அஜீத்தும் தனது கையில் இருக்கும் படங்களை முடித்துவிடுவார். அஜீத்-முருகதாஸ் சேரும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஐங்கரன் இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த பட வேலைகள் 2013ல் துவங்கும் என்று கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு பிறகு சேரும் இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் வெற்றிப் படத்தை தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment