விஸ்வரூபம் பிஸினெஸ்.... கமலின் அதிரவைக்கும் முடிவு.. தியேட்டர்காரர்கள் ரெட்கார்ட் பிளான்?

|

Kamal New Decision On Viswaroopam Release Shocks   

சென்னை: ஹாலிவுட் தயாரிப்பாளரே வியந்து பாராட்டி, ஆங்கிலப் பட வாய்ப்பை கமலுக்கு வழங்கியதாக சொல்லப்படும் விஸ்வரூபம் படம் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் à®'ட்டு மொத்த திரையுலகையும் அதிரவைத்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் கமல் படத்துக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

என்ன பிரச்சினை...?

விஸ்வரூபம் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கு மேல் என்று கமல் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இந்தப் பெரும் தொகை கொடுத்து தமிழில் வாங்கி வெளியிட யாரும் தயாராக இல்லை.

சமீபத்தில் à®'ரு பெரிய தயாரிப்பாளர் கமலின் இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை தமிழக உரிமைக்கு விலை தருவதாகக் கூறியுள்ளார்.

கமலும் அதற்கு à®'ப்புக் கொண்டாராம். ஆனால் அதற்கடுத்து அவர் சொன்னதுதான் தயாரிப்பாளரைத் தூக்கி வாரிப்போட வைத்ததாம்.

அதாவது படத்தை à®'ரே நேரத்தில் டிவி சேனல்களிலும் வெளியிடுவதாகத் திட்டமாம். மேலும் டிவிடி உரிமையையும் கொடுத்துவிடப் போவதாகக் கூறினாராம் கமல்.

இதைத் தொடர்ந்து மிகுந்த அதிர்ச்சியுடன் தனது பேரத்தை முடித்துக் கொண்டாராம் தயாரிப்பாளர். விஷயத்தைக் கேள்விப்பட்ட தியேட்டர்காரர்களோ, கமல் இந்த முடிவில் உறுதியாக இருந்தால், அவர் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்களாம்...

திருட்டு டிவிடியைத் தடுக்க à®'ரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் à®'ளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். எதிர்ப்புகளை மீறி தன் முடிவை நடைமுறைப்படுத்துவாரா கமல்?

பார்க்கலாம்!

 

Post a Comment