உதயநிதி அடுத்து நடிக்கும் படத்துக்கு கொலவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பார் என்று வந்த செய்திகளை உதயநிதி மறுத்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு, உதயநிதி தயாரித்து நடிக்க, எஸ் ஆர் பிரபாகரன் ஒரு படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை உதயநிதி மறுத்துள்ளார்.
"நான் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். என் மனைவி கிருத்திகா முதல்முறையாக இயக்கும் படத்துக்குதான் அனிருத் இசையமைக்கிறார்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கிருத்திகா இயக்கும் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
Post a Comment