அன்னபோலிஸ் (மேரிலாண்ட்): தங்கள் மாநில அரசின் சிறப்பு விருந்தினராக வருகை தருமாறும், திரைத்துறையில் இணைந்து பணியாற்றவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.
12.12.12 அன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. மேரிலாண்ட் மாகாண அரசின் சார்பில் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் அம்மாநிலத்தின் துணை அமைச்சர் டாக்டக் ராஜன் நடராஜன்.
மேலும், வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வரும் டாக்டர் ராஜன், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவிக்க ஆவலுடன் இருப்பதாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிகப் பணக்கார மாகாணம் என்று புகழப்படும் மேரிலாண்டின், ஆளுநர், அம்மாகாண மக்கள் சார்பில் இந்த வாழ்த்தையும் அழைப்பையும் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள டாக்டர் ராஜன், அமெரிக்க வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் – தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரிலாண்ட் மாகாண ஸ்டேட் ஹவுஸ் லெட்டர் பேடில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தன் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராஜன்.
Post a Comment