சென்னை: புதுவையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் லைப் ஆப் பை 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லைப் ஆப் பை திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ எடுத்திருந்தார். இதன் பெரும்பாலான காட்சிகளை பல மாதங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தங்கி எடுத்தார் ஆங் லீ. படத்தின் முதல் ட்ரைலரைக் கூட அவர் சென்னையில்தான் வெளியிட்டார்.
இந்தப் படம் உலகம் முழுக்க நல்ல வசூலையும் மிகச் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.
இப்போது 11 பிரிவுகளில் 85 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் பாடல் (2), சிறந்த எடிட்டிங், சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த ஒலிக் கலவை மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எடுக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனேர் படம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 7 பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது நினைவிருக்கலாம்.
பொதுவாக புதுவையில் எடுத்தால் படம் ஓடாது என்ற மூட நம்பிக்கை சில காலம் இருந்தது. இப்போதோ புதுவையில் எடுத்தால் ஆஸ்கரே வெல்லலாம் என்று மாறியிருக்கிறது!!
Post a Comment