மும்பை: அனில் அம்பானியின் நிறுவனம் தயாரித்த லிங்கன் படம் 12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது. பிரபல இயக்கநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய படம் இது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுப் போட்டியில் இந்தியா மற்றும் இந்திய கலைஞர்கள் தொடர்புடைய படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.
புதுவையில் எடுக்கப்பட்ட ஆங் லீயின் லைப் ஆப் பை படம் 11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனம், ஸ்பீல்பெர்க்குடன் கூட்டாக தயாரித்த லிங்கன் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அனில் அம்பானி, "ஸ்டீபன் ஸ்பைல்பெர்க்குடன் இந்தப் படத்தில் பணியாற்றியதை தான் பெருமையாக கருதுகிறேன். அதிகபட்ச விருதுகளை இந்தப் படம் வெல்ல வாழ்த்துகள்," என்றார்.
ஸ்பீல்பெர்க் இதற்கு முன் 6 முறை சிறந்த இயக்குநர் விருதுக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார். இரண்டு முறை விருதினை வென்றுள்ளார்.
இந்தியாவில் எடுக்கப்பட்ட மற்றொரு படமான ஜீரோ டிகிரி தர்ட்டியும் இந்த முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனுபம்கெர்
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடித்த சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படம் 8 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Post a Comment