விஸ்வரூபம் ஜனவரி 25-ம் தேதி 500 தியேட்டர்களில் வெளியாகும் - அறிவித்தார் கமல்

|

Viswaroopam Will Hit Screens On Jan 25

சென்னை: விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். டிடிஎச்சில் வெளியாகும் தேதி குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

ஆனால், டிடிஎச் முயற்சிக்கு துணை நின்ற எந் திரையுலக சகோதரர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விஸ்வரூபம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கைப் புரிந்து கொண்டு டிடிஎச் எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிஎச்சில் எப்போது வெளியாகும் என்று கமல் எதுவும் கூறவில்லை.

விஸ்வரூபம் படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் முதலில் வெளியாகும் என்பதைத்தான் நேற்று காலை அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்து, அவர்களுக்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக பிரஸ் மீட் வைத்து கூறினார் கமல். ஆனால் இன்று அவர் அதே அபிராமி ராமநாதன் உள்ளிட்டோருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதே தேதியைத்தான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

Post a Comment