சென்னை: 8 மாதத்திற்குள் ஒரு படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்பது அஜீத் குமாரின் கணக்கு.
இது குறித்து அஜீத் குமார் கூறுகையில்,
ஒவ்வொரு 8 மாதத்திற்கும் ஒரு படத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறேன். விருதுகள் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை. ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் என்றார்.
மங்காத்தா படத்தில் இருந்து அவர் இந்த கணக்கை பின்பற்றுகிறார். ஆனால் மங்காத்தாவில் நடித்துக் கொண்டே பில்லா 2விலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. அதை முடித்த கையோடு சிறுத்தை இயக்குனர் சிவாவின் படத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தன் படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் அதற்கு வலை என்று பெயர் வைக்கிறார்கள் என்று நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
Post a Comment