டிடிஎச் சந்தாதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்போம்.. கொடுக்காமலும் போகலாம்..! - இது கமல் பதில்

|

Kamal Reply On Dth Refund

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் பார்க்க பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் கொடுப்போம்... கொடுக்காமலும் போகலாம். இது பணம் கொடுத்த அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விவகாரம், என்றார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து கமல் ஹாஸன் இன்று பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஒரே மாதிரி பதிலையே தந்தார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார். இதனால் கடுப்பான ஒரு நிருபர், "ஏங்க கமல், ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறீர்களே, தமிழில் பதில் சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்க, பின்னர் தமிழுக்குத் தாவினார்!

செய்தியாளர் கேள்விகளும் கமல் பதில்களும்...

விஸ்வரூம் வெளியாகும் தேதிதான் என்ன?

அதை நான் பிறகு சொல்வேன். அதை இப்போதே சொல்ல வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்திக்க முடியாது.

படம் நாளை டிடிஎச்சில் வெளியாகவில்லை... பணத்தைத் திருப்பித் தருவீர்களா?

அதை நீங்கள் கேட்கக் கூடாது. அது பணம் கொடுத்தவர்களுக்கும் எனக்குமானது. இது என் பொருள். நான் காட்டுகிறேன். பிடித்தால் பார்க்கட்டும். பிடிக்காதவர்கள் பார்க்காமல் போக உரிமையுள்ளது.

உரிய தேதியில் படம் போடாவிட்டால் வாங்கிய பணத்தை கொடுப்பதுதானே சட்டப்படி சரி?

அந்த சட்ட விவகாரமெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை தந்தாலும் தரலாம். நீங்கள் நடுவில் புகுந்து இதனை பெரிதாக்காதீர்கள்!

திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சு தொடருமா?

அது எனக்கும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உள் பிரச்சினை. அதனை நீங்கள் பெரிதாக்காமல் இருந்தால் சரி.

 

Post a Comment