நமீதாவின் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிக்கு மின் திருட்டு?

|

Power Stolen Namitha S Real Estate Function

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டுமனை விற்பனைக்காக நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மங்கலம்பேட்டை- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் ரியல் ஏஜன்சி நிறுவனத்தில் மனை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கக்காசு வழங்கும் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மங்கலம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் நடிகை நமீதா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை திருடி நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம், உளுந்தூர் பேட்டை மின்சாரத்துறை செயற்பொறியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு எங்களுக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்தபோது மின்திருட்டு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கான ஆதாரமும் இல்லை. ஆதாரம் கிடைத்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Post a Comment