கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்!

|

Police Charged Rs 100 Fine Vivek

சென்னை: காரில் அனுமதியின்றி கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு ரூ 100 அபராதம் விதித்தனர் சென்னை மாநகர போலீசார்.

சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார் வந்தது.

அந்த காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே காரை போக்குவரத்து போலீசார் நிறுத்தி, "உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பிரபலமான நீங்களே இதைச் செய்யலாமா?" என்றனர்.

உடனே, காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார். ஆனால் தற்போது அனுமதி இல்லாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அபராத தொகையை நடிகர் விவேக் செலுத்தினார்.

செலவு ரூ 100... பலன்? பெரிய பப்ளிசிட்டி!!

 

Post a Comment