விஸ்வரூபம்: ஜெ. அரசின் தடையால் கர்நாடக, கேரள தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்

|

பெங்களூர்: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநில தியேட்டர்களில் அமோக வசூலாக உள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு சாதகமாக தீரப்பும் வந்துவிட்டது. ஆனால் தமிழக அரசோ அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் விஸ்வரூபம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்க்க தமிழக ரசிகர்கள் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

thanks tn govt ban on vishwaroopam
அதிலும் குறிப்பாக பெங்களூரில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்கிடையே நேற்று கர்நாடகத்தில் விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் பல்வேறு நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களில் அனுமதி பெற்று படத்தைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
 

Post a Comment