சென்னை: இனி எந்த படத்திலும் பிகினி காட்சியில் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் நயன்தாரா பிகினியில் வருகிறார். படம் வெளியாகும்போது அவரது நடிப்பைவிட கவர்ச்சி தான் திரையில் அதிகமாகத் தெரியும் என்று எல்லாம் பேச்சு கிளம்பியது.
இது குறித்து நயன்தாராவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
அஜீத் படத்தில் மீண்டும் பிகினியில் வருகிறேன் என்ற செய்தியில் உண்மையில்லை. அந்த படத்தில் நான் ஓவராக கவர்ச்சியில் வருவதாகக் கூறுவதும் பொய். அப்படத்துக்கு பிகினி காட்சியே தேவையில்லை. இனி எந்த படத்திலும் பிகினி காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக நயன்தாரா அஜீத் நடித்த பில்லா படத்தில் பிகினி காட்சியில் வந்து மேக்சிமம் கவர்ச்சி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment