நஷ்டம்தான்... ஆனாலும் அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்!

|

Viswaroopam Tops Us Box Office

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.

முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.

இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

 

Post a Comment