கமலுக்கு நான் தருகிறேன் தியேட்டர் - தாசரி நாராயணராவ்

|

Dasari Narayana Rao Welcomes Kamal Move

கமல்ஹாஸன் நிஜமான உலகநாயகன். அவர் படத்துக்கு யார் தியேட்டர் தந்தாலும் தராவிட்டாலும் நான் தருகிறேன், என்று முழங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முக்கியப் புள்ளி தாசரி நாராயணராவ்.

சமீபத்தில்தான் ஹைதராபாதில், தாசரி நாராயணராவ் தலைமையில் விஸ்வரூபம் இசையை வெளியிட்டார் கமல் என்பது நினைவிருக்கலாம்.

தாசரி நாராயணராவ் கட்டுப்பாட்டில் ஏராளமான திரையரங்குகள் ஆந்திராவில் உள்ளன.

சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பெரிய படங்கள் வெளியாவதால் விஸ்வரூபத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடப் போவதாக முதலில் கமல் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது தாசரி நாராயணராவ் தந்த தைரியத்தில், தமிழில் வெளியாகும்போதே, ஆந்திராவிலும் விஸ்வரூபத்தை வெளியிடப் போகிறாராம் கமல்.

விஸ்வரூபம் குறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், "'டிடிஎச்சில் முன்கூட்டியே படத்தை வெளியிடும் கமல் முடிவை நான் வரவேற்கிறேன். அவருக்கு ஆதரவாக தியேட்டர்களைத் தரவும் முடிவு செய்துள்ளேன். கமல் நிஜமான உலக நாயகன். அவர் முடிவு திரையுலகுக்கு பலன் தரும்," என்றார்.

 

Post a Comment