இனி கவர்ச்சியான வேடங்களைவிட காமெடியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் ஹன்ஸிகா.
ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு தமிழில் 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ஹன்ஸிகா. இவற்றில் இரண்டு படங்கள் சிம்புவுடன் நடிக்கிறார்.
கவர்ச்சி நாயகியாகத்தான் முதலில் இவர் களமிறங்கினார். எங்கேயும் காதல், மாப்பிள்ளை படங்களில் இவரது கவர்ச்சியைத்தான் பிரதானமாகக் காட்டினார்கள். ஆனால் அந்தப் படங்கள் படுதோல்வியடைந்தன.
இந்த நிலையில் அவர் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள காரெக்டரில் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றி பெற்றது. அதற்கு முன் இதேபோன்ற பாத்திரத்தில் நடித்த வேலாயுதமும் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது.
இப்போது தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை விட காமெடி அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறாராம் ஹன்ஸிகா.
சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் ஹன்ஸிகாவின் பாத்திரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவு காமெடியாக உள்ளதாம்.
அடடா... ஒரு கவர்ச்சி காமெடியாகிவிட்டதே!
Post a Comment