சென்னை: தனது பிறந்தநாள் சிறப்பாக இருந்ததற்கு காரணமான தனது காதல் கணவருக்கு ஐஸ்வர்யா தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
3 படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. 3 பட ஷூட்டிங்கின்போது தனுஷும், ஸ்ருதியும் ஓவர் நெருக்கமானதே வீட்டில் புகைச்சல் வரக் காரணம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய் என்று சொல்வது போன்று உள்ளது ஐஸ்வர்யாவின் ட்வீட்.
ஐஸ்வர்யா கடந்த 1ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் என்றால் கணவர் என்ன சர்பிரைஸ் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த அவருக்கு அந்த நாளை இனிய நாளாக்கியுள்ளார் தனுஷ். ஆம், மனைவியின் பிறந்தநாளை அவரோடு கங்கைக் கரையில் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு இடையே உள்ள காதல் அழியவில்லை என்று தெரிகிறது.
ஐஸ்வர்யாவின் ட்வீட்: எனது பிறந்தநாளை கங்கைக் கரையில் கொண்டாட வைத்த காதல் கணவருக்கு நன்றி.
சூப்பர் ஸ்டாரும் இந்த ட்வீட்டைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்.
Post a Comment