'ஹேக்கர்' அஜீத்தின் படத்திற்கு பெயர் 'வலை'

|

It Is Valai Hacker Ajith

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார் ஹேக்கராக நடிக்கும் படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப் போகிறார்களாம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் தலைப்பு வ என்ற எழுத்தில் துவங்கும் என்று கூறப்பட்டது. வ என்ற எழுத்தில் துவங்கிய வாலி, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் ஆகும். அந்த வகையில் தற்போது அவர் நடிக்கும் படத்திற்கும் அதே வ என்ற எழுத்தில் பெயர் தேடினார்கள்.

இந்நிலையில் படத்திற்கு வலை என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் வலை என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்களாம். மேலும் இந்த தலைப்பை வைப்பது என்று தான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தார்களாம்.

இதற்கிடையே அஜீத் படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் தலைப்பை பயன்படுத்த மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் குடம்பத்தை விஷ்ணுவர்தன் அணுகினார் என்பது பொய்யாம். அந்த பெயரை வைக்க அவர்கள் நினைக்கவே இல்லையாம்.

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக பிப்ரவரி மாதம் துபாய் செல்கிறார்கள்.

 

Post a Comment