நெல்லை: பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு நெல்லை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். இசைத் துறையில் அவரின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவருக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதி நெல்லை அபிசேகபட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. இந்த விழாவின்போது தான் விஸ்வநாதனுக்கு கவுரவ பட்டம் வழங்கப்படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.கே.குமரகுரு கூறுகையில்,
பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ரோசையா தலைமை வகிக்கிறார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார் என்றார்.
Post a Comment