மும்பை: குறுக்கு வலியால் அவதிப்படும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் குறுக்கு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாது சிசிஎல் மூன்றாவது சீசன் அறிமுக விழாவில் கலந்து கொண்டு நடனமும் ஆடினார். அன்றைய தினம் நடனமாட அவரால் பயிற்சி கூட செய்ய முடியாத அளவுக்கு வலி இருந்திருக்கிறது. இதையடுத்து அவர் தான் முறையாக பயிற்சி செய்யவில்லை என்றும், தனது நடனத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் அப்தாப் சிவதசானி சல்மானைப் பார்த்ததும் அவரை கட்டிப்பிடிக்க வந்திருக்கிறார். அப்போது சல்மான் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவரது உடல் நலக் குறைவு காரணமாக அவர் இந்த சீசனில் கிரிக்கெட் விளையாடவில்லை.
சல்மான் கான் ஓவராக உடற்பயிற்சி செய்வதால் தான் அவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. நள்ளிரவானாலும் உடற்பயிற்சி செய்து விட்டு தான் தூங்குவாராம்.
Post a Comment