எண்பதுகளில் தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் அனுராதா. 700 படங்களுக்கும் மேல் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். 35 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சில காலம் திரை உலகை விட்டு ஒதுங்கியிருந்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் வாரிசுகளை களம் இறக்குவதைப் போல இவரும் தனது மகள் அபிநயஸ்ரீ யை நடிக்க வைத்தார். ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த அவர் சில படங்களில் குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டர் பின்னர் காணாமல் போனார். இப்போது அவரும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களம் இறங்கிவிட்டார்.
இப்போது மேட்டர் அது இல்லை. மகளுக்கு அமையாத சினிமா வாய்ப்பு மகனுக்காவது சரியாக அமையுமா? என்ற ஆசையில் தனது மகன் கெவினை ஹீரோவாக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘என்னமோ பிடிச்சிருக்கு' என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகளைத்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அனுராதாவின் மகனையாவது பிடிக்குதா என்று பார்ப்போமே?.
Post a Comment