தீனா படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகின்றனர் அஜீத்தும் இயக்குநர் முருகதாஸும்.
அஜீத்துக்கு தல என்ற பெயர் நிலைக்கக் காரணம், முருகதாஸ் இயக்கிய தீனாதான். இது முருகதாஸுக்கு முதல் படம்.
இருவருக்குமே திருப்புமுனையைத் தந்தது தீனா. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அஜீத்துக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தே வந்தது.
இந்தப் படம் வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் அஜீத்தும் முருகதாஸும் இணைந்து படம் பண்ண முடிவு செய்துள்ளனர்.
முருகதாஸ் சொன்ன ஒரு கதையை ஓகே பண்ணி வைத்திருக்கிறாராம் அஜீத். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர் ஆஜீத். அவர் கணிப்புப்படி, முருகதாஸுடன் இப்போது இணைந்து படம் செய்தால் பெரிய வெற்றி கிடைக்குமாம். இந்த படத்தில் அஜீத்துக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் ஏற்கெனவே இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வரலாறு, வில்லன் போன்ற படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட்டானவைதான். அந்த சென்டிமென்ட்டும் இந்தப் படத்தை அஜீத் உடனே ஒப்புக் கொள்ளக் காரணம் என்கிறார்கள்.
விஷ்ணுவர்தன் இயக்கும் வலை, சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவை முடிந்ததும், அஜீத் - முருகதாஸ் படம் தொடங்கவிருக்கிறது!
Post a Comment