நடிகர் கார்த்தி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி தியேட்டர்களை விட்டு ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளவர்கள் பாஜகவினர்.
சுராஜ் இயக்க, கார்த்தி - அனுஷ்கா நடித்துள்ள இந்தப் படத்தில் சாமியார்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதால் இதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.கவினர் செஞ்சி தாசில்தாரை சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.
இதே மனுவை தமிழக முதல்வர் மற்றும் விழுப்புரம் கலெக்டருக்கும் அனுப்பியுள்ளனர். படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டாலும், தவறான காட்சி இடம்பெற்ற படம் தியேட்டர்களில் ஓடக்கூடாது என்பதால்தான் இந்த போராட்டம் என அவர்கள் கூறினர்.
Post a Comment