முத்தக்காட்சியில் நடி... நெருக்கமா நடின்னு கட்டாயப்படுத்துவாங்க என்பதால் அஜீத், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் யாருடனும் நான் நடிக்க விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன்.
தமிழ் சினிமாவின் இன்றைய ஹாட் நாயகி லட்சுமி மேனன்தான். அவர் நடிக்க சுந்தரபாண்டியன், கும்கி இரண்டுமே அதிரடியாக ஜெயித்துவிட்டன.
தற்போது சசிகுமாருடன் ‘குட்டிப்புலி', விமலுடன் ‘மஞ்சப்பை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ராசியான நாயகி என்ற பெயர் வந்துவிட்டதால், லட்சுமி மேனனை தங்கள் படங்களில் ஹீரோயினாக்க முன்னணி நடிகர்கள் முயன்று வருகின்றனர்.
ஆனால் லட்சுமியோ, முன்னணி நடிகர்களுடன் நடிக்க விருப்பமில்லை என்று அதிரடியாகக் கூறிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன்.
இனி முன்னணி நடிகையாக வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும். ஆனால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி இருக்கும். எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேன்.
எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கை கணக்கல்ல... கொஞ்ச காலம் நடித்தாலும் டீசன்டாக நடித்துவிட்டுப் போய்விட வேண்டும்," என்றார்.
அதுக்குள்ள இவ்வளவு தெளிவா... ரொம்ப பட்டுட்டார் போலிருக்கு!!
+ comments + 1 comments
Manasula Ullatha Theliva Solli Vittaar LAXMI MENAN Naan Ivarukku Thalai Vanangugiren,,.
Post a Comment