ஜீ தமிழ் டிவியில் ‘ஒரு தாயின் சபதம்' என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உமா பத்மாநாபன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
உலகில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் பொதுவானது தாய்மை. அனைத்து உயிர்களும் இந்த மண்ணுக்கு வருவது ஒரு தாயால். அப்படிப்பட்ட ஒரு தாய், தான் ஒரு குழந்தையைப் பெற்றதில் இருந்து வளர்த்து ஆளாக்குவது வரை எண்ணற்ற துயரங்களை தாங்குகின்றனர்.
அதுவும் ஒரு ஆண் துணை இல்லையெனில் இந்த பூமியில் ஒரு தாய் தனி மனுஷியாக நின்று குழந்தைகளைக் காப்பாற்றுவது என்பது மிகக்கடினமான காரியம். அப்படி ஒரு தாய், எப்படி தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து அந்தக் குழந்தையைப் பலகஷ்டங்களுக்கிடையில் படிக்கவைத்து ஆளாக்கி, இந்த சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதனாக வளர்த்தெடுக்கிறாள் என்பதனையும் அதற்காக அந்தத் தாய் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளையும், அதற்காக அவளுக்கு ஏற்பட்ட வலிகள், வேதனைகள், அவள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்துப் பார்க்க வைப்பதற்கான தருணம்தான் ‘ஒரு தாயின் சபதம்' எனும் நிகழ்ச்சி.
இந் நிகழ்ச்சி நமது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 12 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகும். பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உமா பத்மநாபன் ஒரு தாயின் சபதம் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்குகிறார்.
Post a Comment