ஆண்களை அவமதித்த வழக்கு - சோனா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு

|

Court Summons Sona

சென்னை: ஆண்களை ஒரு டிஸ்யூ பேப்பர் போல செக்ஸுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவேன் என்று கூறிய சோனாவுக்கு எதிரான வழக்கில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் கோர்ட்டில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனுவில், "11.11.2012 தேதியிட்ட ‘டைம்பாஸ்' என்ற பத்திரிகையில், நடிகை சோனாவின் பேட்டி வெளியாகியது. அதில், எனக்கு செக்ஸ் தேவைப்பட்டா ஆம்பளைங்களை யூஸ் பண்ணிப்பேன். டிஷ்யூ பேப்பர் மாதிரி, அப்புறம் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதான்' என்றும் ‘லிவிங் டுகெதர் என்பது கல்யாணத்தை விட பெரிய முட்டாள்தனம். அதை நிறைய ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன், அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. யூஸ் அன்ட் த்ரோதான் பெஸ்ட்' என்று நடிகை சோனா கூறியுள்ளார்.

சுயமரியாதை, நாகரீகம் இல்லாத இவரது பேட்டி சமுதாயத்தில் சுயமரியாதை உள்ள ஆண்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.

இவரது பேட்டியை படிக்கும் நபர்களின் மனதில் கெட்ட எண்ணம் தோன்றி, தவறு செய்ய தூண்டும். அதனால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும், அவரது கருத்து தனிப்பட்ட மனிதரை குறிப்பிடாமல், ஒட்டுமொத்த ஆண்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. எனவே சோனா மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த மனு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் அருள்துமிலன் ஆஜராகி வாதம் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சிவகுமார், ‘வழக்கு குறித்து வரும் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை சோனாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

தன் பேட்டியை குறிப்பிட்ட பத்திரிகை தவறாக வெளியிட்டுவிட்டது என்று சோனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment