பெங்களூர்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லைப் ஆப் பை படத்திற்கு உயிர் கொடுத்ததே பெங்களூரைச் சேர்ந்த டெக்னிகலர் இந்தியா சாப்ட்வேர் என்ற கம்பெனி தான்.
ஆஸ்கர் விருதுக்கு சிறந்த அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் புதுவையில் எடுத்த லைப் ஆப் பை மற்றும் ப்ரொமிதியஸ் ஆகிய படங்கள் அடக்கம். இந்த இரண்டு படங்களுக்குமே பெங்களூரைச் சேர்ந்த டெக்னிகலர் இந்தியா என்ற நிறுவனம் தான் அனிமேஷன் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் இந்திய தொழில்நுட்பத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது குறித்து டெக்னிகலர் இந்தியாவின் தேசிய தலைவர் பிரென் கோஷ் கூறுகையில்,
ப்ரொமிதியஸ் படத்தில் 400 ஷாட்கள் எடுக்க நாங்கள் உதவினோம். லைப் ஆப் பையில் உள்ள 960 ஷாட்களில் 130 ஷாட்கள் எடுக்க எங்கள் குழு உதவியது என்றார்.
முன்னதாக டெக்னிகலர் நிறுவனம் ஹாலிவுட் வெற்றிப்படங்களான பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ், குங் ஃபூ பாண்டா, தி பென்குவீன்ஸ் ஆப் மடகாஸ்கர் என்னும் சீரியல் ஆகியவற்றுக்கு அனிமேஷன் செய்து கொடுத்துள்ளது.
லைப் ஆப் பை, ப்ரொமிதியஸில் ஏதாவது ஒரு படத்திற்கு விருது கிடைத்துவிட்டால் இந்திய அனிமேஷன் கம்பெனிகளுக்கு வாய்ப்புகள் வந்து குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment