சென்னை: இயக்குனர் பிரபு சாலமோன் தான் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் மணி ரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடல் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள் துளசி நடித்துள்ளார். இந்த 2 கலைவாரிசுகளையும் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் கௌதம் பிரபு சாலமோனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. பிரபு சாலமோன் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரவு, லக்ஷ்மி மேனனை வைத்து எடுத்த கும்கி படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல வேளையில் புதிய படத்திற்கான முயற்சியை துவங்கிவிட்டார் இயக்குனர்.
முதலில் பிரபுவின் மகனை இயக்கிய அவர் தற்போது கார்த்திக்கின் மகனை இயக்கவிருக்கிறார்.
Post a Comment