சென்னை: விஸ்வரூபம் படம் வெளியிடுவதை தாமதப்படுத்துமாறு திரையரங்குகளுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.
ஆனால் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல், படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவே, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை, மூத்த அமைச்சர் ஒருவர் தொடர்பு கொண்டாராம்.
'விஸ்வரூபம் விவகாரத்தில் அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சிறுபான்மையினர் உணர்வுகளை மதிக்க வேண்டும். எனவே அரசுக்கு துணை நிற்கும் வகையில், மேல்முறையீட்டு மனு முடிவு தெரியும் வரை படத்தைத் தாமதப் படுத்த முடியுமா?' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
அரசுத் தரப்பு கேட்கும்போது, மறுக்க முடியுமா என்ன... உடனடியாக அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் தொலைபேசியில் அழைத்த அந்த நிர்வாகி அரசின் முடிவை தெரிவித்து, வெயிட் பண்ணுங்க... அவசரப்பட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.
சாதாரண நடிகர்களின் படங்களுக்கே சிறப்புக் காட்சி போட அனுமதிக்கும் அரசு, கமல் படத்துக்கு இன்று அனுமதி மறுத்த போதே விஷயத்தைப் புரிந்து கொண்ட திரையரங்குகள், இப்போது அப்பீல் மனு ரிசல்ட் தெரியும் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதன் பின்னணி இதுதானாம்!
Post a Comment