ஆசை வெட்கமறியாது.. அதுவே பேராசையாக மாறினால்? அதுதான் சந்தானத்தின் லட்டு தின்ன ஆசை படத்தின் நிஜக் கதை ஆகிவிட்டது.
இந்தப் படம் பாக்யராஜின் இன்று போய் நாளை வா கதைதான் என்று ஆரம்பத்தில் சந்தானமும் ராம நாராயணனும் கூறிவந்தனர். அந்த நேரத்தில் பாக்யராஜும் என் அனுமதியின்றி என் கதையைத் திருடி படமெடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டி போலீஸிலும் புகார் செய்திருந்தார்.
இந்தப் பிரச்சினையில் பாக்யராஜ் தனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்று புலம்பி வரும் நிலையில், லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை என்னுடையது, எனக்கே சொந்தமானது என்று சந்தானம் திடீர் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார்.
'படத்தின் வசூல் விவரம் முழுவதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி வழக்கு தொடர்ந்துள்ளேன். மொத்த வசூலையும் பார்த்த பிறகு எனக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பது பற்றி கேட்பேன்' என்று பாக்யராஜ் சொன்னதுமே, உஷாரான சந்தானம் மனமறிய இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.
'மூன்று பேரை வைத்து ஒரு கதை என் சிந்தனையில் ஓடியது. அதைதான் கண்ண லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படமாக எடுத்துள்ளோம்,' என்று சந்தானம் கூறியுள்ளதைக் கேட்டு கொதித்துப் போன பாக்யராஜ், இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்று மக்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன், என்றார்.
+ comments + 2 comments
he even claims that he doesn't copy anyone.
True! when anyone who has eyes can see who he copies. Dubakur!
Post a Comment