இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு

|

Venkat Prabhu Supports Karthi Alex Pandian

ஒருபடத்தின் வெற்றி தோல்வியை இயக்குநரும் கதையுமே நிர்ணயிக்கின்றன என்று இயக்குநர் வெங்கட் பிரபு டிவிட்டரில் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலெக்ஸ் பாண்டியன், சமர், புத்தகம் ஆகிய படங்கள் ரிலீசானது. இதில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியனுக்கு விமர்சனங்களை போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். இணையதளங்களில் மோசமான அளவில் விமர்சனங்கள் எழுதப்பட்டன.

இதற்கு டிவிட்டரில் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகன் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவராக வெங்கட் பிரபு பேசியுள்ளார்.

ஒரு படத்தில் கதாநாயகன் என்பவன் அவனது கதாப்பாத்திரத்தில் நடிக்க மட்டுமே செய்கிறான். அதை முதலில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு கதாசிரியரும், இயக்குநருமே முக்கிய காரணகர்த்தாவாக அமைகிறார்கள் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

அதே ரசிகர்கள் தானே படம் வெற்றி பெற்றால் கட்அவுட் வைக்கிறார்கள். படம் சரியில்லாவிட்டால் அவர்கள் கெட் அவுட் சொல்லாமல் இருப்பார்களாக வெங்கட் பிரபு.

நீங்களாவது கார்த்தியை வைத்து பிரியாணியை சாப்பிடும் வகையில் சமைத்துப் போடுங்களேன்.

 

Post a Comment