ஸ்ருதியை இயக்க ஆசைப்படும் விஷால்!

|

Vishal Wants Direct Shriti Hassan

ஸ்ருதிக்காகவே ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், அவரை ஹீரோயினாக வைத்து இயக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் விஷால்.

சமர் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்திலிருக்கும் விஷால், தனது அடுத்தடுத்த படங்கள் குறித்துக் கூறுகையில், "நடிப்பில் இப்போது பிஸியாக இருந்தாலும், ஒரு படத்தை நானே இயக்க வேண்டும் ஆசையும் உள்ளது.

கைவசம் கதை ரெடி. இந்தக் கதையில் ஸ்ருதி ஹாஸன் நடித்தால் நன்றாக இருக்கும். அந்தக் கதையை எழுதும்போதே ஸ்ருதியை மனதில் வைத்துதான் எழுதினேன். அது நடக்குமா நடக்காதா என்றெல்லாம் சொல்ல முடியாது.

என்னுடைய அடுத்த படம் மதகஜராஜா. கலகலப்பான ஜாலி படம் இது. விரைவில் வரவிருக்கிறது.

அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, ஜீவா நடிக்கின்றனர்.

எப்போது படம் தொடங்கும் என்று தெரியவில்லை. அதை வெங்கட்பிரபுதான் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.

 

Post a Comment