சென்னை: பவர் ஸ்டாருக்கு த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க விருப்பமில்லையாம் ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்.
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் அண்மையில் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டாரு தான் என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். இதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உர்ர் கிர்ர் என்று இருக்கின்றனர். இந்நிலையில் அழகு நாயகிகள் த்ரிஷா, அனுஷ்கா, சமந்தாவின் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார்.
பவர் ஸ்டாரிடம் நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க ஆர்வமில்லை. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கத் தான் விருப்பம் என்றார்.
சூப்பர் ஸ்டாரே பல ஆண்டுகளாக முயன்று இறுதியில் அமிதாப் பச்சன் மூலம் அணுகி ஐஸ்வர்யா ராயை தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். அப்படி இருக்கையில் பவர் ஸ்டார் ஆசை நிறைவேறுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment