'ஃபோர்ப்ஸ்' இந்திய பிரபலங்கள் லிஸ்டில் ஹன்ஸிகா!!

|

Hansika Forbes List

ஃபோர்ப்ஸ் பிரபலமானவர்கள் பட்டியலில் தமிழ் நடிகை ஹன்ஸிகாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்ஸிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

‘சேட்டை', ‘சிங்கம் 2', ‘வாலு', ‘பிரியாணி', ‘தீயா வேலை செய்யணும் குமாரு' ஆகிய படங்கள் அடுத்து வரவிருக்கின்றன.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலை தயாரிக்கிறது. இதற்காக 250 பேர் கொண்ட ஒரு லிஸ்டை தயாரித்துள்ளது. இளவயது பிரபலங்கள் பட்டியலின் முதற்கட்ட பரிசீலனையில் ஒருவராக ஹன்சிகா உள்ளார்.

இதன் மூலம் ஃபோர்ப்ஸின் புகழ்பெற்ற 100 பேரில் ஒருவராக ஹன்ஸிகா தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பை கேட்டதும் ஹன்சிகா ரொம்பவுமே உற்சாகமானார். சந்தோஷத்தில் அவர் கூறும்போது, என்னால் இதை நம்பவே முடியவில்லை.

இதற்காக என்னுடைய ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சக நடிக, நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

 

Post a Comment