நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நாடகமாகவும் திரைப்படமாகவும் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘வியட்நாம் வீடு' தொலைக்காட்சி சீரியலாக வடிவமெடுக்கிறது. இதில் கதாநாயகனாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்கிறார்.
ஜெயா டிவியில் ‘வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை, திரைக்கதையை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதுகிறார். ரிஷி இயக்கும் இந்த தொடரில் ஒய்.ஜி. மகேந்திரனுடன் சுலக்சனா, கவிதாலயா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.
வியட்நாம் வீடு கதையை ஏற்கனவே மேடை நாடகமாக பலமுறை அரங்கேற்றியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன். இது ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்பினை பெற்றதை அடுத்து அதை சீரியலாக எடுத்துள்ளனர். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.
Post a Comment