ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடமாட்டேன் என்று நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படம் தயாராகிறது. இதில் சென்னை இளைஞராக தமிழ் பேசி நடிக்கிறார் ஷாரூக்கான்.
தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர்.
மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரெயிலில் வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் இதில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நயன்தாராவை ஆட வைக்க படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி விரும்பினார். இதற்காக நயன்தாராவை நேரில் சந்தித்து பேசினார்.
இந்தப் பாடலுக்கு ஆட பெரிய தொகையை சம்பளமாகத் தர முன்வந்தார். ஆனால் இந்திப் படங்களில் இப்போதைக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ள நயன், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
"ஒற்றைப் பாடலுக்கு ஆடும் அளவுக்கு நான் ப்ரீயாக இல்லை. 6 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் இந்திப் படங்கள் வேண்டாம் என முன்பே முடிவு செய்துவிட்டேன். எனவே இந்தப் பாடலுக்கு ஆடும் நிலையில் இல்லை," என்று அவர் கூறிவிட்டாராம்.
Post a Comment